முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் புதிய திராவிட கழக தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் சந்திப்பு.

X
NAMAKKAL KING 24X7 B |23 Oct 2025 7:25 PM ISTபுதிய திராவிட கழகத்தின் வெல்லட்டும் சமூக நீதி - ஆறாவது மாநில மாநாடு வரும் 30-11-2025 அன்று மொடக்குறிச்சி எழுமாத்தூரில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் தலைமை சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றார்.வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் முன்னாள் அமைச்சரும் தி.மு.க. மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். மேலும், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.அதை முன்னிட்டு, மாநாட்டிற்கான அழைப்பிதழை, இன்று (23.10.2025) காலை கரூரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் இல்லத்தில், புதிய திராவிட கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து வழங்கி வாழ்த்து பெற்றோம்...
Next Story
