தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் - மாவட்ட ஆட்சியர் தகவல்.

X
NAMAKKAL KING 24X7 B |24 Oct 2025 4:48 PM ISTநாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2025 ஆம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி 31.10.2025 அன்று நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நாமக்கல் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
6 ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரையிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பிற்பகல் 1.30 மணி முதல் தொடங்கி நடத்தப்பெறும். இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- வழங்கப்பெற உள்ளது. பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000/-வீதம் வழங்கப் பெறவும் உள்ளது. இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- வழங்கப் பெற உள்ளது.31.10.2025 அன்று பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி தலைப்புகள் வெண்தாடி வேந்தர் தன்மானப் பேரொளி பெரியாரின் சமூகச் சிந்தனைகள் 31.10.2025 அன்று கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி தலைப்புகள் : தெற்காசியாவின் சாக்ரடீஸ் பெரியாரின் சமூகச் சீர்திருத்தங்கள் சுயமரியாதை இயக்கம் ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம். கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வழியாகவும், பள்ளி மாணவ மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம்.மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூடுதல் கட்டிடத்திலுள்ள தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்- 04286 - 292164ஐ தொடர்பு கொள்ளலாம். இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story
