சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமியின் இறுதி ஆசை நிறைவேற்றி தருவாரா துணை முதல்வர் ?!

தலைமலை சேவா டிரஸ்ட் உருவாக்கிய இந்த 27 கி.மீ. கிரிவலப் பாதையை சாலையாக அமைத்திட ஆய்வு செய்திடவும், அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் ரூ 2 கோடி நிதியை சட்டமன்றத்தில் பேசி பெற்றுத்தந்தவர் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருகை தந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம், பொன்னுசாமி எம்எல்ஏவின் இறுதி ஆசையை நிறைவேற்றிட வேண்டும் என்று தலைமலை சேவா டிரஸ்ட் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம் - சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள தலைமலை மிகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்த மலையை சுற்றி தலைமலை ஸ்ரீ சஞ்சீவிராயப் பெருமாள் கிரிவலப் பாதை 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட அதி நீள கிரிவலப் பாதையாகும்.
தலைமலை சேவா டிரஸ்ட் உருவாக்கிய இந்த 27 கி மீ . கிரிவலப் பாதையை சாலையாக அமைத்திட ஆய்வு செய்திடவும், அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் ரூ 2 கோடி நிதியை சட்டமன்றத்தில் பேசி பெற்றுத்தந்தவர் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த கிரிவல ஆய்வுப் பணி முழுமை பெறாமல், சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய ஆய்வு சரியான முறையில் செய்ய படவில்லை என்ற ஆதங்கம் சட்டமன்ற உறுப்பினருக்கு இருந்தது, அதன் அடிப்படையில்
சமீபத்தில் வரவிருந்த சட்டமன்ற மதிப்பீட்டு குழுவிற்கு கிரிவலச் சாலை வேண்டும் என்று வலியுறுத்திய மனுவை வழங்க தயார் செய்து வைத்திருந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக இயற்கை மரணம் எய்தினார் அவரின் கோரிக்கையை, நிறைவேற்றும் விதமாக அவர் இறுதியாக அரசுக்கு தர தயார் செய்து வைத்திருந்த மனுவின் அடிப்படையில் இறுதி அஞ்சலி செலுத்த வரும் தமிழக துணை முதல்வர் அவர்கள், பொன்னுசாமி எம்எல்ஏவின் இறுதி ஆசையை நிறைவேற்றித் தர வேண்டும்
என்று தலைமலை சேவா டிரஸ்ட் சார்பில் துணை முதல்வரிடம் எம்எல்ஏ தயார் செய்து வைத்திருந்த கோரிக்கை மனுவின் நகலை தலைமலை சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் அக்னி.ராஜேஷ் தலைமையில் , நிர்வாகிகள் சிவராஜ், செல்வகுமார், கலைச்செல்வன், துரைசாமி உள்ளிட்டோர் வேண்டுகோள் வைத்தனர்.மனுவை பெற்றுக் கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொன்னுசாமி எம்எல்ஏ இல்லத்திலேயே அமர்ந்து அவரின் இறுதி ஆசை மனுவை முழுமையாக படித்து பார்த்து, இது சம்பந்தமாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கிறேன் என்றார்.
Next Story