மாணவியர் விடுதி மற்றும் கற்றல் கற்பித்தல் கூடத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா. மதிவேந்தன்.
NAMAKKAL KING 24X7 B |25 Oct 2025 6:30 PM ISTஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் இராசிபுரம் வட்டம், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் ரூ.8.73 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாணவியர் விடுதி மற்றும் கற்றல் கற்பித்தல் கூடத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ரூ.8.73 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாணவியர் விடுதி மற்றும் கற்றல் கற்பித்தல் கூடத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் இராசிபுரம் வட்டம், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் ரூ.8.25 கோடி மதிப்பீட்டில் கல்லூரி மாணவியர் விடுதி மற்றும் ரூ.47.88 இலட்சம் மதிப்பீட்டில் 50 கல்லூரி மாணவியர்கள் கற்கும் வகையில் கற்றல் கற்பித்தல் கூடம் கட்டுமானப் பணிகளை நேரில், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், இக்கட்டிடத்தில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தங்குதடையின்றி வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story


