முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வழங்கப்பட்ட சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் விருது.
NAMAKKAL KING 24X7 B |25 Oct 2025 6:38 PM ISTஇராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி)க்கு நாமக்கல் மாவட்ட அளவில் சிறந்த இரத்ததானம் முகாம் அமைப்பாளருக்கான விருது மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து நடத்திய "உலக இரத்ததான கொடையாளர் தினம் 2025" -நிகழ்ச்சியானது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட அரசு இரத்த மையத்தின் சார்பாக 2024ஆம் ஆண்டில் அரசு இரத்த வங்கிகளுக்கு தன்னார்வ இரத்ததான முகாம்களை சிறப்பாக நடத்திக் கொடுத்து, தேவைப்படும் நோயாளிகளுக்கு இரத்தம் அளித்து அவர்கள் வாழ்வை ஒளிரச் செய்ததற்கான “சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் 2024” என்ற கேடயத்தை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வழங்கினார்.இதனை முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.பி.விஜய்குமார் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ந.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
Next Story



