நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சிறப்பு செயற்குழு கூட்டத்தில் மறைந்த சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏவுக்கு நினைவேந்தல்!
Namakkal King 24x7 |25 Oct 2025 10:11 PM ISTபொன்னுசாமி எம்எல்ஏவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்தும், துணை முதல்வர் நேரில் வருகை புரிந்து அஞ்சலி செலுத்தியமைக்கும் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பொன்னுசாமி மறைவையொட்டி, நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து... நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசுவாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மாயவன், மாவட்ட துணை செயலாளர் ராணி பெரியண்ணன், பொருளாளர் ஏ.கே.பாலசந்திரன்,பொதுக்குழு உறுப்பினர் காளியய்பன்,மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி மற்றும் நகர, ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட திமுகவினர், மறைந்த எம்எல்ஏவுடன் பழகிய நினைவுகளை பகிர்ந்து அவருக்கு புகழஞ்சலி சூட்டினர்.இந்த நிகழ்வில்,கடந்த 1986 ஆம் ஆண்டு கொல்லிமலை வாழவந்திநாடு ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் தன்னுடைய இறுதி காலம் வரை மக்கள் நலனுக்காக உழைத்தவர். 2006 ஆம் ஆண்டு சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2009–இல் ஒருங்கிணைந்த மாவட்ட துணை செயலாளராக பொறுப்பேற்றார். 2011, 2016 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியுற்றபோதும், 2021 தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். மறைந்த தலைவர் மு.கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிஸ்டாலினிடம் மிகுந்த அன்பை பெற்றவர். அனைவரிடத்திலும் நன்கு பழகக்கூடிய அவர், கொல்லிமலை மலைவாழ் மக்களுக்காக அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ரத்த வங்கி, மிளகு பதப்படுத்தும் தளம், நாமக்கல்–துறையூர் சாலை விரிவாக்கம், ரூ.500 கோடியில் சேந்தமங்கலம் தொகுதிக்கான தனிக்குடிநீர் திட்டம், கொல்லிமலையில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை ஆகியவற்றை கொண்டு வந்த பெருமைக்குரியவர். எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட துணை செயலாளர் மட்டுமின்றி, மத்திய கூட்டுறவு வங்கி உறுப்பினர் போன்ற பதவிகளையும் வகித்தார். அவருடைய மறைவையடுத்து, முதல்வர் இரங்கல் தெரிவித்தும், துணை முதல்வர் நேரில் வருகை புரிந்து அஞ்சலி செலுத்தியமைக்கும் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நினைவேந்தல் நிகழ்வில் நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், நவலடி, பழனிவேல், ஜெகநாதன், பாலசுப்பிரமணி, செந்தில் முருகன், எம்பி கௌதம்,ஜெயபிரகாஷ் , ஆர்.எம்.துரைசாமி, பேரூர் செயலாளர்கள் தனபாலன், முருகேசன், செல்லவேல், சுப்பிரமணி, ஜெயக்குமார் பொன்.நல்லதம்பி பழனியாண்டி, அன்பழகன், கண்ணன், ராஜேஷ்,மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பொன் சித்தார்த், கிருபாகரன் மற்றும் ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட,மாநில நிர்வாகிகள்,பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், நகர்மன்ற,பேரூர் மன்ற தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story


