நாமக்கல்லில் ரெப்கோ வங்கி தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

X
Namakkal King 24x7 |25 Oct 2025 10:49 PM ISTநாமக்கல்லில் செயல்படும் ரெப்கோ வங்கி மூலம் தாயகம் திரும்பியோர் பொருளாதாரம், கல்வி, வாழ்வாதார மேம்பாட்டிற்கும், மருத்துவ உதவிகளுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெப்கோ வங்கி தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள பில்டர்ஸ் மஹாலில் நடைபெற்றது .இதில் ரெப்கோ வங்கி, தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் தாயகம் திரும்பிய மகளிருக்கு விலையில்லா தையல் இயந்திரம், மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ரெப்கோ வங்கி சேர்மன் இ.சந்தானம் மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவர் சி.தங்கராஜு ஆகியோர் வழங்கி உறுப்பினர்கள் மத்தியில் பேசியதாவது... *தாயகம் திரும்பியோர் கூட்டுறவு நிதியகம் ரெப்கோ வங்கியாக செயல்பட்டு வருகிறது. 1988ம் ஆண்டு நாமக்கல்லில் செயல்படும் வங்கி மூலம் தாயகம் திரும்பியோர் பொருளாதாரம், கல்வி, வாழ்வாதார மேம்பாட்டிற்கும், மருத்துவ உதவிகளுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சொற்ப தொகை மட்டுமே நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலை மாறி தற்போது போதுமான அளவிற்கு கிடைத்து வருகிறது. 2ஆயிரத்து 500ரூபாய் முதல் 10ஆயிரம் ரூபாய் வரை கல்விக்கான ஊக்கத்தொகை வழங்குவதுடன், முதல் இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் உயர்கல்விக்கான செலவினங்களை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது. இடைத்தரகர்கள் யாருமின்றி நேரடியாக பேரவை உறுப்பினர்கள் மூலம் வங்கிநிர்வாகத்தை அணுகி திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும். மேலாண்மை இயக்குனரின் ஊக்கத்தினால் தற்போது 100கோடி ரூபாய் நிகர லாபத்தையும், 10ஆயிரம் கோடி ரூபாய் வைப்புத்தொகையும், வராக்கடன் இல்லாத வங்கியாகவும் செயல்படும் நிலையில்; வங்கியில் 'அ' வகுப்பு உறுப்பினர்களாக பதிவு செய்திடவும், வங்கி மூலம் வழங்கப்படும் பல்வேறு சலுகைகளையும் கேட்டுபெற தாயகம் திரும்பியோர்கள் முன்வரவேண்டும் என்று பேசினர்.இந்நிகழ்வில், வங்கியின் வாடிக்கையாளா்கள், பொதுமக்கள், வங்கி ஊழியா்கள், தாயகம் திரும்பிய உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
Next Story
