நாமக்கல் பில்டர் அசோசியேஷன் சார்பில் என்.கொசவம்பட்டியில் இலவச மருத்துவ முகாம் ! ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.

X
Namakkal King 24x7 |26 Oct 2025 7:54 PM ISTஇதுவரை நடைபெற்ற 15 முகாம்களில் மொத்தம் 4,997 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு அதற்கான உதவிகள் செய்து தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாநகராட்சி என்.கொசவம்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில், அகில இந்திய கட்டுனர் சங்க, நாமக்கல் மையம் மற்றும் விவேகானந்தா மருத்துவ கல்லூரி சார்பில், கொசவசம்பட்டியில் பில்டர்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா சார்பில் 16 வது மருத்துவ முகாம் நடைபெற்றது. இலவச பொது மருத்துவ முகாம் நாமக்கல் மாநகராட்சி என்.கொசவம்பட்டி சுயராஜ்ஜீயா அரசு நிதி உதவி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமை,கட்டுநர்கள் சங்கத்தின் நாமக்கல் மைய தலைவர் பி.எஸ்.டி.தென்னரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.இந்த நிகழ்வில், நாமக்கல் சத்தியமூர்த்தி &கோ சேர்மன் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்து பேசினார்.சிறப்பு அழைப்பாளராக கொசவசம்பட்டி கிராம நல அறக்கட்டளை தலைவர் எம்.சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார், பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா நாமக்கல் மையத்தலைவர் பி.எஸ்.டி.தென்னரசு பேசுகையில்....பிஏஐ சார்பில் கிராமப்புற மக்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாதத்தில் இரண்டு முறை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளைத் தேர்ந்தெடுத்து பொதுமக்களுக்கு உடல்நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இம்மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இதுவரை நடைபெற்ற 15 முகாம்களில் மொத்தம் 4,997 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு அதற்கான உதவிகள் செய்து தரப்படுகிறது என்றார்.திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மருத்துவக்குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பொது மருத்துவம் , எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, மகளிர் நல மருத்துவம், கண் பரிசோதனை, பொது அறுவை சிகிச்சைக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் சுற்று வட்டார ஊர் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 500க்கும் மேற்பட்டோர், உடல் பரிசோதனை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.நாமக்கல் மையக் கட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் குணசேகரன்,சகாதேவன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கட்டுநர்கள் சங்க செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.
Next Story
