நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள விவசாயிகள்  குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
X
நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர்-2025-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் 31.10.2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மேலும், இக்கூட்டத்தின் வாயிலாக வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story