பட்டியலின மக்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்காத பெண் காவல் ஆய்வாளர்.

காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கோரி தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வன்கொடுமை, பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்படும் பட்டியலின மக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கோமதி, உதவி ஆய்வாளர் சங்கீதா ஆகிய இருவரை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது பட்டியலின மக்கள் கொடுக்கும் புகார்கள் மீது ஆய்வாளர் கோமதி, உதவி ஆய்வாளர் சங்கீதா ஆகியோர் நடவடிக்கை எடுக்காமல் புகார் அளிக்க வரும் நபர்களிடம் தகாத வார்த்தையில் பேசியும் வருகின்றனர் எனவே இருவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி தமிழ் புலிகள் கட்சியினர் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story