நிரந்த பந்தல் அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்கு நிறைந்த மனதுடன் நன்றி தெரிவித்த விவசாயிகள்.

நிரந்த பந்தல் அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்கு  நிறைந்த மனதுடன்  நன்றி தெரிவித்த விவசாயிகள்.
X
நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் நிரந்த பந்தல் அமைக்க ரூ.15.00 இலட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிரந்த பந்தல் அமைத்த விவசாயிகள் நிறைந்த மனதுடன் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
"நிரந்தர பந்தல் அமைப்பு" என்பது விவசாயத்தில், குறிப்பாக தோட்டக்கலை பயிர்களுக்கு, நிலையான ஆதரவை வழங்க உருவாக்கப்பட்ட ஒரு நிரந்தர கட்டமைப்பாகும். இது பாகற்காய், பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், கொத்தவரை, சௌசௌ உள்ளிட்ட காய்கறி மற்றும் கொடி வகை பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுகிறது. செடிகள் படர்வதற்கு உறுதுணையாக இருப்பதுடன், அதிக மகசூல் கிடைக்கவும் உதவுகிறது. மேலும் தரமான காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கும் உதவுகிறது. பந்தலில் காய்கறிகள் தொங்குவதால், விளைச்சல் அதிகமாக இருக்கும். காற்றோட்டம் சீராக இருக்கும் என்பதால், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் குறையும். அறுவடை செய்வது, களை எடுப்பது மற்றும் பராமரிப்புப் பணிகளை எளிதாகச் செய்ய முடியும். நீர்ப்பாசனத்தை திறம்படப் பயன்படுத்த முடியும். தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை, விவசாயிகளுக்கு நிரந்தரப் பந்தல் அமைக்க மானியம் வழங்குகிறது. குறிப்பாக, தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த மானியம் வழங்கப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற, விவசாயிகள் தோட்டக்கலைத் துறையை அணுகலாம். பந்தல் அமைப்பதற்கு இரும்பு, சிமெண்ட், அல்லது வலுவான மரக் கம்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உறுதியான வலைகள் அல்லது கயிறுகள் மூலம் கொடிகள் படர்வதற்கு வசதி செய்யப்படுகிறது. மாடித் தோட்டம் போன்ற சிறு இடங்களிலும் நிழல் வலைகளைப் பயன்படுத்தி பந்தல் அமைப்புகளை உருவாக்கலாம். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் எலச்சிபாளையம், எருமப்பட்டி, மோகனூர், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், பள்ளிபாளையம், பரமத்தி, ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர் ஒன்றியங்களில் 2025-2026-ம் ஆண்டிற்கு ரூ.15 இலட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிரந்தர பந்தல் அமைத்துள்ள தும்மங்குறிச்சி ஊராட்சி மேல்முகம் மேலப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி திரு.நடேசன் அவர்கள் தெரிவிக்கையில், நான் கடந்த 12 வருடங்களாக பந்தல் காய்கறிகளான பாகல், புடல், பீர்க்கன், சுரைக்காய் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறேன். தோட்டக்கலை துறை மூலம் பந்தல் சாகுபடி மான்யம் பெற்று மிகசிறிய அளவில் அரை ஏக்கரில் சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பருவங்களில் சாகுபடி செய்து வருகிறேன். நடப்பாண்டு 2025-26 ஆம் ஆண்டில் ஒரு ஏக்கர் காய்கறி சாகுபடி நிரந்திர பந்தல் அமைப்பதற்கு, தோட்டக்கலை துறை மூலம் ரூ.1,20,000/- மான்யம் பெற்று பாகல் சாகுபடி செய்து வருகிறேன். அங்கக வேளாண்மை முறைகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி மூலம் ரூ.40,000/- வரை ஒரு பருவத்திற்கு செலவு செய்து ஏக்கருக்கு சராசரியாக ரூ.80,000/- வரை நிகரலாபமாக எடுத்து வருகிறேன். வருடத்திற்கு ரூ.2.00 இலட்சம் வரை சராசரியாக இலாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசு நடத்தும் நாமக்கல் உழவர் சந்தை மூலம் வாரத்தின் ஏழு நாட்களும் தினமும் காலை மாலை வேளைகளில், காய்கறிகளை விற்பனை செய்வதன் மூலமே நல்ல முறையில் லாபம் ஈட்டி வருகிறேன். முறையாக சந்தை அறிவுடன் என்ன பயிர் செய்தாலும் இன்றைய காலகட்டத்தில், உழைப்பிற்கு ஏற்ற லாபம் ஈட்ட முடியும். நிரந்தர பந்தல் அமைக்க மானியம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்த மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
Next Story