டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
NAMAKKAL KING 24X7 B |28 Oct 2025 7:52 PM ISTநாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம், சாலைப் பாதுகாப்பு மன்றம், நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஆகிய அமைப்புகளின் சார்பில் "சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி" கல்லூரி வளாகத்த
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஈ. எஸ். முருகேசன் கலந்து கொண்டார்.விலைமதிக்க முடியாதது மனித உயிர். தினந்தோறும் மாவட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் சாலை விபத்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. வாகனத்தை மிக வேகமாக இயக்குதல், சாலை விதிகளை மதிக்காமல் இருத்தல், இருசக்கர ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் இயக்குவது, செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது போன்றவையே சாலை விபத்திற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன என்றார் . விபத்தில் சிறுவயது உடையவர்கள் பலியாவது சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமல்ல இந்த சமுதாயத்திற்கே பேரிழப்பு என்றார். சாலை விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை பெரும்பாலும் தவிர்க்கலாம் என்றார். நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய நாமக்கல் மாவட்ட தொடர்பு அலுவலர் & சாலைப் பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு தலைவர் சி. ஆர். ராஜேஷ் கண்ணன் தன் உரையில் குறிப்பிடுகையில், சாலையில் பயணிக்கும் ஒருவர் செய்யும் தவறால் பெரிய விபத்துகள் ஏற்பட்டு அப்பாவி மனித உயிர்கள் பலியாகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் - கர்னூல் அருகே ஆம்னிப் பேருந்து பெரிய விபத்தில் சிக்கி 20-க்கும் மேற்பட்டவர் தீயில் கருகினர். இருசக்கர வாகன ஓட்டியின் கவனக்குறைவால் இந்த பேரிடர் நடந்தது என்றார். மற்றொரு சிறப்பு அழைப்பாளர் மதுரையை சார்ந்த சாலைப் பாதுகாப்பு பயிற்சியாளர் ஏ. நரசிம்ம மணி, சாலை விபத்துகள் எப்படியெல்லாம் ஏற்படுகிறது. சாலை குறீயீடுகளின் நோக்கம், சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் போன்றவற்றை வீடியோ மூலம் சிறப்பாக விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் மேற்கண்ட அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள் எஸ். தேவி, வீ. கோகிலா, வீ. கலைவாணி, எஸ். ஹேமலதா உட்பட முதலாம் ஆண்டு இளநிலை & முதுநிலை பாடப்பிரிவு மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story


