நவோதயா பள்ளி மாணவர்கள் மேற்கொண்ட கல்விக் களப்பயணம்.
NAMAKKAL KING 24X7 B |29 Oct 2025 5:44 PM ISTமத்திய இடை நிலைக் கல்வி வாரியம் அறிவுறுத்தலின் படியும், குழந்தைகளுக்கான பாடத்திட்டத்தோடு தொடர்புடைய கற்றல் திறனை மேம்படுத்தவும், அறிந்துகற்றல், புரிந்து கற்றல், நேரில் பார்த்து புரிதல்.
அனுபவ அறிவாற்றலை வளர்த்தல், போன்ற கல்வித்தொடர் பயிற்சிகளை மேற்கொள்ளும் வகையில் சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்விச்சுற்றுலா, கல்விப்பயணம், களப்பணி, அறிவியல் கண்காட்சி நடத்துவது வழக்கம் அந்த வகையில் நமது நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் புதன்கிழமை கோனூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ் கம்பெனிக்கு களப்பயணம் சென்றனர். சுமார் 300க்கும் மேற்பட்ட குழந்தைச் செல்வங்கள் இந்த களப் பயணத்தில் கலந்துகொண்டனர். டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் தீபலட்சுமி முரளிதரன் குழந்தைச் செல்வங்களை நேரில் வரவேற்றார்.கம்பெனி எவ்வாறு இயங்குகின்றது, நூல் தயாரிக்கும் முறைகள் குறித்தும்,நூல் ஆடையாக வடிவமைக்கும் முறைகள் குறித்தும், மேலும் கம்பெனியில், நூல் நூற்றல், ஆடை வடிவமைப்பு, ஆடை அலங்காரம், ஆடைகள் பேக்கிங் செய்வது, ஆடைகளை தூய்மையாக பராமரித்தல் மற்றும் நாமக்கல்லில் தயாரிக்கப்படும் ஆடைககள் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. எவ்வாறு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதைப் பற்றி குழந்தைகளுக்கு விளக்கமாகவும், தெளிவாகவும் எடுத்துக்கூறினார். மேலும் சூரிய ஒளியில் இருந்து எவ்வாறு மின்சாரம் தயாரித்து அதனை தொழிற்சாலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தபபடுகிறது என்பகை குறித்தும் தெளிவாக விளக்கி கூறினார். குழந்தைச்செல்வங்கள் பார்த்து கற்றுக்கொண்டனர்.மாணவர்கள் கம்பெனியின் அனைத்துப் பகுதிகளையும், பணிகளையும் நேரில் சுற்றிப் பார்த்து கற்றுக்கொண்டனர். மாணவர்களின் பாதுகாப்பிற்காக பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், ஒட்டுநர்கள் அனைவரும் உடன்சென்றனர். மாலை 3.00 மணிக்கு களப்பயணத்தை நிறைவு செய்தனர். இந்த களப்பயணத்திற்கு அனுமதி வழங்கி குழந்தைகளுக்கு அழகாக விளக்கி கூறி ஒத்துழைப்பு நல்கிய கம்பெனி உரிமையாளருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினர்.
Next Story



