முதல்வர் ஸ்டாலினின் வார்டு சிறப்பு கூட்டம் நாமக்கல்லில் துணைமேயர் மற்றும் மக்கள் கலகலப்பான சந்திப்பு.

நகராட்சி நிருவாகம் குடிநீர் வழங்கல் துறை நாமக்கல் மாநகராட்சி வார்டு சிறப்பு கூட்டம் அரசாணை (நிலை) எண்.324 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் (தேர்தல்) துறை, நாள்.17.10.2025 இல் உத்தரவிடப்பட்டுள்ளவாறு.
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 30 வார்டுகள் மற்றும் இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளிலும் வருகிற 20.10.2025 (புதன்கிழமை) முதல் சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினர் / மாநகராட்சி அலுவார்கள் தலைமையில் வார்டு வாரியாக "வார்டு சிறப்பு கூட்டம்" நடைப்பெற்று வருகிறது அதன் தொடர்ச்சியாக இன்று அன்பு நகர் 3,வார்டு பூங்கா வளாகத்தில் துணை மேயர் பூபதி தலைமையில் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெற்றது இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் வார்டில் உள்ள நிறை குறைகளை பகிர்ந்து கொண்டார்கள் மேலும் துணை மேயர் பூபதி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வெகுவிரைவில் சரி செய்து தருவதாக கூறினார். தங்களது வார்டு பகுதியில் அடிப்படை தேவைகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு சாலை பழுதுகள், பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றை நிறைவேற்றியதைப் பற்றி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர் மேலும் புதியதாக வார்டுகளில் உள்ள வீடுகளின் பாதுகாப்பிற்காகவும் பொது மக்களின் நன்மைக்காகவும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதை பொதுமக்கள் மகிழ்ச்சிக்கு உள்ளாகினார்கள் ஏதேனும் குறைபாடு இருந்தால் தங்கள் பகுதியில் நடைபெறும் மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்டு எடுத்துரைக்கலாம். வார்டு பகுதி பொதுமக்களால் தெரிவிக்கப்படும் பிரதான மூன்று கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். துணை மேயர் பூபதி கூறினார்.
Next Story