நாமக்கல் தாலுகா சங்கத்தின் சார்பாக நடைபெற்ற புகைப்பட பயிற்சி வகுப்புகள்.

நாமக்கல் தாலுகா சங்கத்தின் சார்பாக நடைபெற்ற புகைப்பட பயிற்சி வகுப்புகள்.
X
நாமக்கல் தாலுகா சங்கத்தின் சார்பாக இன்று நடைபெற்ற சேலம் சாவித்திரி போட்டோஸ் நிறுவனம் நாமக்கல் தாலுகா சங்கமும் இணைந்து கேனான் மாடலிங் பயிற்சி வகுப்பு நாமக்கல் ஸ்ரீ மஹால் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் 50-க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள் பங்கு பெற்றனர். இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர் சதீஷ் மாநில சங்கத்தின் முத்தான திட்டமான நலம் திட்டம் பற்றி புகைப்பட கலைஞர்களுக்கு விளக்கம் அளித்தார். சதீஷ் அவர்களுக்கு நாமக்கல் தாலுகா சங்கத்தின் கௌரவ தலைவர் நித்தியானந்தம் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை டீ.ஸ்நேக்ஸ் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நாமக்கல் தாலுகா சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்பலரும் உடன் இருந்தனர். இன்று தாலுக்கா சங்கத்தில் 11 பேர் புதியஉருப்பினராக சேர்ந்தனர். அடுத்து நாமக்கல் தாலுகா சங்கத்தின் பயிற்சி வகுப்பு வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி கொல்லிமலையில் ஒரு நாள் பயிற்சி வகுப்பாக நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story