நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனை இருந்த இடத்தில் சித்த மருத்துவமனை ! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு நாமக்கல் எம்பி நன்றி தெரிவித்து கடிதம்!

X
Namakkal King 24x7 |29 Oct 2025 8:01 PM ISTகொல்லிமலையில் சித்தா ஆராய்ச்சி நிலையம் அமையப்பெற்றால் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி மற்றும் அருகாமையில் உள்ள பல மாவட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆகையால் விரைவில் கொல்லிமலையில் சித்தா ஆராய்ச்சி நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாமக்கல்லில் சித்த மருத்தவமனை அமைத்தத்ற்கு நன்றியும், சித்த ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார் அதில் கூறியிருப்பதாவது...அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் நாமக்கல்லில் சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் சித்தா ஆராய்ச்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த கடிதத்தின் படி கோரிக்கை விடுத்திருந்தேன். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் நகரப்பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனை இருந்த இடத்தில் சித்த மருத்துவமனை அமைத்து விரைவில் திறப்பு விழா காண உள்ளமைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகத்திலேயே சிறந்த கல்வி மாவட்டமாக விளங்கும் நாமக்கல்லில் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். சித்த மருத்துவம் இந்தியாவின் மிகவும் பழமையான மருத்துவ முறைகளை கொண்டதாகும். சித்த மருத்துவம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாரம்பரிய மருத்துவ முறை மருத்துவம் ஆகும்.சித்தர்களின் அசாதாரண பங்களிப்புகளால் இது காலப்போக்கில் சித்த மருத்துவம் என்ற பெயரை பெற்றது. சித்த மருத்துவத்தின் அடிப்படைகள் மூலிகைகள் சிகிச்சை முறைகள் நோய்களை அடையாளம் காணும் முறைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ள இயலும். மேலும் சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வைக்கும் மூலிகைகள் அவற்றின் மருத்துவ குணங்கள் சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். எனவே கொல்லிமலையில் சித்தா ஆராய்ச்சி நிலையம் அமையப்பெற்றால் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி மற்றும் அருகாமையில் உள்ள பல மாவட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆகையால் விரைவில் கொல்லிமலையில் சித்தா ஆராய்ச்சி நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
