நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மூன்றாவது சிறப்பு பொதுப் பேரவைக் கூட்டம் !

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மூன்றாவது சிறப்பு பொதுப் பேரவைக் கூட்டம் !
X
கூட்டத்தில் வாசிக்கப்பட்ட 28 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூன்றாவது சிறப்பு பொது பேரவை கூட்டம் நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள ஸ்ரீ மஹாலில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி தலைமையில் நடைபெற்றது.நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குனர் ம.சந்தானம் நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்.
மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் செ.பூபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.கூட்டத்தில் நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் உறுப்பினர் சங்கங்களான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்,நகர கூட்டுறவு வங்கிகள், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள்,வீட்டு வசதி சங்கங்கள் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள்,கூட்டுறவு விற்பனை சங்கங்கள்,கைத்தறி நெசவாளர் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் செயலாட்சியர்கள் செயலாளர்கள் கலந்து கொண்டனர் .கூட்டத்தில் வாசிக்கப்பட்ட 28 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்தனர். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக குழு உறுப்பினர்களான நவலடி சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக மறைந்த சேந்தமங்கலம் சட்ட மன்ற உறுப்பினரும்,நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் பொன்னுசாமி எம்எல்ஏவுக்கு மௌன அஞ்சலி செலுத்தபட்டது.
இதில் நிர்வாக குழு இயக்குநர் மருத்துவர் மாயவன் கூட்டத்திற்கு வருகை புரிந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கும் வங்கி பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் நாமக்கல் சரக துணைப் பதிவாளர் ஜேசுதாஸ்,திருச்செங்கோடு சரக துணைப் பதிவாளர் கிருஷ்ணன், துணைப் பதிவாளர் பணியாளர் அலுவலர் செல்வி, துணைப்பதிவாளர் நாமக்கல் கூட்டுறவு நகர வங்கி பால் ஜோசப், துணைபதிவாளர் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் இந்திரா,நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் தீனதயாளன், உதவி பொது மேலாளர்கள் செல்வம், சேகர்,நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் ராணி, ஜோதிலட்சுமி,கௌரி, செல்வகுமார், வழக்கறிஞர் கணபதி,ராஜேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.நாமக்கல் சரகம் மற்றும் திருச்செங்கோடு சரகம் அனைத்து கூட்டுறவு சார் பதிவாளர் கள அலுவலர்கள், மாவட்ட அனைத்து பொது விநியோக திட்டம் கூட்டுறவு சார் பதிவாளர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story