போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சருடன் நாமக்கல் எம்.பி வி.எஸ் மாதேஸ்வரன் சந்திப்பு.
NAMAKKAL KING 24X7 B |31 Oct 2025 9:58 PM ISTபோக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் MP கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி
செயலாளர் சூர்யமூர்த்தி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் அசோகன், நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.கோரிக்கைகள் நாமக்கல் மாவட்டம் லாரி தொழிலுக்கு பெயர் பெற்ற மாவட்டம் ஆகும். லாரி தொழிலை சார்ந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. கனரக, இலகுரக லாரிகளுக்கு ஆன்லைன் வரி விதிப்பு என்ற பெயரில் காவல் துறையினர் லாரிகள் செல்லாத இடங்களில் கூட ஆன்லைன் வரி விதிக்கின்றனர். ஏற்கனவே லாரி தொழில் அழிந்து வரும் சூழ்நிலையில் இதுபோன்ற அபராதங்களால் லாரி தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது. மேலும் வாகன பதிவு மற்றும் தரச்சான்று பெரும்பொழுது அஞ்சல் வழியில் அசல் ஆவணங்கள் அனுப்புவதற்கு பதிலாக பழைய நடைமுறையை பின்பற்றி உடனடியாக வழங்க ஆவண செய்ய வேண்டும் நாமக்கல் மின்பகிர்மான வட்டத்தில் புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக ஏலூர் துணை மின் நிலையம் அமைக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர்ரிடம் நிலம் கையகப்படுத்தி துணை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக மேற்பார்வை பொறியாளர் பொதுக்கட்டுமான வட்டம் சேலம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மோகனூர் துணை நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடமிருந்து நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக பணம் செலுத்தப்பட்டு உள்ளூர் பொதுமக்கள் ஆட்சேபணையால் நிலம் பெறப்படவில்லை. ஆதலால் மாற்று நிலமாக மோகனூர் சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட நிலத்தினை கையகப்படுத்துவது தொடர்பாக அதன் சிறப்பு அதிகாரி அவர்களிடம் அனுமதி வேண்டி கோப்புகள் நடப்பில் உள்ளது. நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில் மேற்கண்ட பணிகளை விரைந்து முடிக்க மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆவண செய்யுமாறு கோரிக்கை மனு அளித்தார்.
Next Story



