வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் கண்காணிப்பாளர்களுக்கு நடைபெற்ற பயிற்சி , மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவு மற்றும் 1950 ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 21 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிற பொருத்தக்கூடிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினை அறிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 92-இராசிபுரம், 93-சேந்தமங்கலம், 94-நாமக்கல், 95-பரமத்திவேலூர், 96-திருச்செங்கோடு, 97-குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 04.11.2025 முதல் வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, இப்பணி 04.12.2025 வரை நடைபெறவுள்ளது. மேற்கண்ட பணிகளில், 717அங்கன்வாடி பணியாளர்கள், 98 எழுத்தர் பணியாளர்கள் (நகர்புறம்), 2 ஒப்பந்த ஆசிரியர்கள், 151 மதிய உணவு பணியாளர்கள், 1 ஊராட்சி செயலாளர், 197ஆசிரியர்கள், 261 கிராம நிர்வாக அலுவலர், 202 கிராம அளவிலான பணியாளர்கள் என மொத்தம் 1,629 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 92-இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 261 நபர்கள், 93-சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 284 நபர்கள், 94-நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 290 நபர்கள், 95-பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் 254 நபர்கள், 96-திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 261 நபர்கள், 97-குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 279 நபர்கள் நியமிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவத்தினை விநியோகிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி சிறப்பு தீவிர திருத்தத்தினை நடத்திட பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம் நகராட்சி, கொளத்துக்காடு, பாவடி தெரு, திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராஜா கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, வாக்காளர்களுக்கு படிவத்தினை வழங்கினார். தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலரின் கண்காணிப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இப்பயிற்சியில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சு.சுந்தரராஜன், உதவி ஆணையர் (கலால்) என்.எஸ்.ராஜேஷ்குமார், மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story