விநாயகர் கோவிலில் சிறப்பு அன்னாபிஷேக விழா

விநாயகர் கோவிலில் சிறப்பு அன்னாபிஷேக விழா
X
குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு அன்னாபிஷேக விழா நடந்தது.
குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு அன்னாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக நாளையொட்டி குமாரபாளையம் அனைத்து சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் விழா நடந்தது. குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சில மாதங்கள் முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோவிலில் விநாயகருக்கு அன்னாபிஷேக விழா நடந்தது. அனைத்து சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடந்த நிலையில் இந்த விநாயகர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி பெற வைத்தது. முன்னதாக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன்பின் அன்னாபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. எம்.ஜி.ஆர்.நகர், குப்பாண்டபாளையம், பூலக்காடு, குமாரபாளையம் உள்பட பல பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story