கோவை மாணவி பாலியல் கொடுமை—நாமக்கல்லில் பாஜக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம் !

கோவை மாணவி பாலியல் கொடுமை—நாமக்கல்லில் பாஜக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம் !
X
நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி உறுப்பினர்கள், மகளிர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கோவை கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்
கோவை கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து, மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில்,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.100-க்கும் மேற்பட்ட மகளிர் கலந்துகொண்டு,கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதில் பாஜக மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். பாஜக நாமக்கல் மாவட்டத் தலைவர்கள் சரவணன், இராஜேஷ்குமார், மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி உறுப்பினர்கள், மகளிர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கோவை கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாற்றிவிட்ட திமுக அரசை கண்டித்து, மகளிர் அணியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசே மக்களிடம் மன்னிப்பு கேள் என்றும் கண்டன கோஷங்களை முழங்கினர். மேலும், தமிழகத்தில் குற்ற செயல்களுக்கு காரணமாக உள்ள கள்ளச்சாராய சந்து கடைகளை மூட வேண்டும்.,பெண்கள் தொடர்பான குற்றம் செய்பவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை, எவ்வித சமரசமும் இன்றி தண்டிக்க வேண்டும்., திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை., பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை., தமிழக அரசுக்கு இது அவமானம். குற்ற செயலுக்கு ஈடுபட வரும் இது காலதாமதம் இன்றி நடவடிக்கை எடு., என் மனம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, மாவட்ட பாஜக மகளிர் அணியினர் கோஷங்கள் எழுப்பினர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட தலைவி சுகந்தி, கிழக்கு மாவட்ட தலைவி திவ்யா மாவட்ட பாஜக மகளிர் அணியினர், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என 100-கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story