நாமக்கல் பிஜிபி விவசாய கல்லூரி மற்றும் பிஜிபி மெட்ரிக் பள்ளிகளின் தாளாளர் பி. ஜி. பெருமாள் இயற்கையை எய்தினார் !

X
Namakkal King 24x7 |6 Nov 2025 10:01 PM ISTநாமக்கல் மாநகரில் கல்வி சேவை செய்ய இவரது மூத்த சகோதரர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி அவர்களால் நியமனம் செய்யப்பட்டு இன்று வரை கல்வி சேவை புரிந்து வந்தார்.
நாமக்கல் சேந்தமங்கலம் சாலை வேட்டாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள பிஜிபி விவசாய கல்லூரி மற்றும் பிஜிபி மெட்ரிக் பள்ளிகளின் தாளாளர் பி ஜி பெருமாள் அவர்கள் (நவம்பர் -5) இயற்கை எய்தினார் இதுகுறித்து உணவு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் பட்டதாரிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரணவகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது...நாமக்கல் பிஜிபி கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி அவர்களின் சகோதரர் ஆவார்.இவர் கல்விப் பணி மட்டுமல்லாமல் நாமக்கல் மாநகரில் மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்களிலும் நிர்வாகியாக இருந்து சேவை புரிந்துள்ளார். வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில் தர்மபுரி நகரிலே பல்வேறு தொழில்கள் செய்த இவர் பின்னாளில் நாமக்கல் மாநகரில் கல்வி சேவை செய்ய இவரது மூத்த சகோதரர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி அவர்களால் நியமனம் செய்யப்பட்டு இன்று வரை கல்வி சேவை புரிந்து வந்தார். அன்னாரது மறைவிற்கு சுற்றுலா உணவு மற்றும் விருந்தோம்பல் பட்டதாரிகள் கூட்டமைப்பு சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்!
Next Story
