நாமக்கல் சுற்று வட்டார கோவில்களில் கிருத்திகை வழிபாடு! முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் சுற்று வட்டார கோவில்களில் கிருத்திகை வழிபாடு! முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்
X
கிருத்திகை வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டு முருகனை வழிபட்டு சென்றனர்
ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, நாமக்கல் சுற்று வட்டார கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.நாமக்கல் - திருச்செங்கோடு சாலை பெரியூர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், பஞ்சாமிா்தம், திருநீறு உள்ளிட்டவற்றால் அபிஷேகம், பூக்களால் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல்,நாமக்கல்-மோகனூா் சாலை பாலதண்டாயுதபாணி,கூலிப்பட்டி முருகன் கோவில், கருமலை முருகன் கோயில்களிலும்,சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயிலிலும், கிருத்திகை வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story