ராசிபுரம் ஆர்.சி. தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது: மாணவ மாணவிகளின் பல்வேறு படைப்புகளை பார்வையிட்டு ஆசிரியர்கள் பாராட்டு..

ராசிபுரம் ஆர்.சி. தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது: மாணவ மாணவிகளின் பல்வேறு படைப்புகளை பார்வையிட்டு ஆசிரியர்கள் பாராட்டு..
X
ராசிபுரம் ஆர்.சி. தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது: மாணவ மாணவிகளின் பல்வேறு படைப்புகளை பார்வையிட்டு ஆசிரியர்கள் பாராட்டு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலை பகுதியில் உள்ள ஆர்.சி.தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் முன்னாள் மாணவியும், தற்போது சவுதி அரேபியாவில் ஹோமியோபதி மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்தினி அவர்கள் மற்றும் அவருடைய கணவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் மாணவ, மாணவிகள் பல்வேறு அறிவியல் துறைகளில் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் தேவையற்ற காகித கழிவுகளைக் கொண்டு பல்வேறு வண்ணங்களில் காகித பூ, மற்றும் மலர்களை உருவாக்கிய மாணவர்களை ஆச்சரியத்துடன் ஆசிரிய பெருமக்கள் பாராட்டினர். மேலும் தேசத் தலைவர்களின் புகைப்படங்கள், அறிவியல் துறையில் சாதித்த விஞ்ஞானிகள் புகைப்படங்கள் வைத்தும், மற்றும் பழைய நாணயங்கள் ரூபாய் நோட்டுகள், சுவாமி திரு உருவப் படங்கள், பல்வேறு வகையான வீட்டின் அலங்கார தோரணங்கள், மற்றும் பாரம்பரிய உணவு முறைகள் அதன் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்க வகையில் உணவு தின்பண்டங்கள் வைத்து ஆசிரியர்களும் இந்த அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். சிறந்த திட்டங்களை மதிப்பீடு செய்ய ஆர்.சி. தூய இருதய தொடக்கப்பள்ளி ஆசிரியை ஜினோ மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நமச்சிவாயன் ஆகியோர் நடுவராக கலந்து கொண்டு சிறந்த அறிவியல் திட்டங்களுக்கு மதிப்பெண் வழங்கினர். பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி ஜீவா, தலைமையாசிரியை அருட்சகோதரி மோனிகா மற்றும் ஆசிரியர் பெருமக்கள் இணைந்து நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர். அருகிலுள்ள ஆங்கில மற்றும் தமிழ் வழிப் பள்ளி மாணவ, மாணவிகள் வருகை புரிந்து கண்காட்சியைப் பார்வையிட்டு பாராட்டினர். நிகழ்ச்சி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது. சிறந்த படைப்பாற்றல் கொண்ட அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்ற பொருள்களுக்கு பரிசுகள் வழங்கியும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
Next Story