நாமக்கல்லில் கேஸ் பிளஸ் ஆட்டோ எல்பிஜி பெட்ரோல் பங்கை கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி திறந்து வைத்தார்!

நாமக்கல்லில் கேஸ் பிளஸ் ஆட்டோ எல்பிஜி பெட்ரோல் பங்கை கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி திறந்து வைத்தார்!
X
பங்க் திறப்பு விழா சிறப்பு சலுகைகளாக கார் மற்றும் ஆம்னிக்கு ₹1000க்கு கேஸ் நிரப்பும் வாடிக்கையாளருக்கு ₹100 மதிப்புள்ள கேஸ் வழங்கப்பட்டது. ஆட்டோவிற்கு ₹3000க்கு கேஸ் நிரப்பும் வாடிக்கையாளருக்கு காக்கி சட்டை அன்பளிப்பாக வழங்கப்பட்டது
நாமக்கல் - திருச்செங்கோடு சாலை, தமிழ்நாடு நுகர்பொருள் உணவு பொருள் தானியகிடங்கு (வேர்ஹவுஸ்) எதிரில் தென்பாண்டியன் குழும நிறுவனத்தின் புதிதாக நிறுவப்பட்டுள்ள "கேஸ் பிளஸ் " ஆட்டோ எல்பிஜி பங்க் திறப்பு விழா நடந்தது.பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெட்ரோல் பங்க்கை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்து வாடிக்கையாளருக்கு சிறப்பு பரிசை வழங்கினார்.
பங்கின் அலுவலக அறையை நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் பூபதி திறந்து வைத்தார்.தென்பாண்டியன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் நல்லுசாமி ,காளியப்பன், சாந்தி நல்லுசாமி, ரவீந்திரன், ரஞ்சித் செல்லப்பா, ராகவி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.பங்க் திறப்பு விழா சிறப்பு சலுகைகளாக கார் மற்றும் ஆம்னி ₹1000க்கு கேஸ் நிரப்பும் வாடிக்கையாளருக்கு ₹100 மதிப்புள்ள கேஸ் வழங்கப்பட்டது. ஆட்டோவிற்கு ₹3000க்கு கேஸ் நிரப்பும் வாடிக்கையாளருக்கு காக்கி சட்டை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மேலும் முதலில் வந்த 100 வாடிக்கையாளருக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வில் நாமக்கல் தங்கம் மருத்துவமனை மருத்துவர் குழந்தைவேல் ,நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அருள், அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வசீராளன், லாரி உரிமையாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.தென்பாண்டியன் குழும நிறுவனங்களின் தலைவர் நல்லுசாமி நன்றி கூறினார்.திறப்பு விழா ஏற்பாடுகளை தென்பாண்டியன் நிறுவன மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
Next Story