இந்து மயான ஆக்கிரமிப்பு கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

X
Komarapalayam King 24x7 |10 Nov 2025 8:52 PM ISTகுமாரபாளையத்தில் இந்து மயான ஆக்கிரமிப்பு கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட ஓலப்பாளையம் இந்து சமத்துவ மயானத்தில் சிலுவைகளை அப்புறப்படுத்தக் கோரியும்,இந்த மயானம் பற்றி இந்துக்களுக்கு எதிராக போலி ஆவணங்களை தயாரித்த குமாரபாளையம் முன்னாள் வட்டாச்சியர் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு மேற்கு மாவட்ட பொதுச் செயலர் ஸ்ரீபாலமுருகன் தலைமை வகித்தார். மேற்படி கோரிக்கைகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்து முன்னணி நகர தலைவர் பாலாஜி, செயலர் சக்திவேல், பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர், பா.ஜ.க. மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வழக்கறிஞர் தங்கவேல், பா.ஜ.க. நகர தலைவர் வாணி, மகளிரணி சரோஜா, மாணவர் அணி ராமு உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
