மயான குப்பை குவியலில் தீ விபத்து அசம்பாவிதம் தவிர்ப்பு

X
Komarapalayam King 24x7 |13 Nov 2025 3:56 PM ISTகுமாரபாளையம் மயான குப்பை குவியலில் தீ விபத்து ஏற்பட்டது.
குமாரபாளையம் குளத்துகாடு பகுதியில் தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட மயானம் உள்ளது. இதில் குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. வழிபோக்கர்கள் சிலர் சிகரெட் பிடித்து விட்டு தூக்கி எரிந்து விடுகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு 09:00 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கம் குடியிருப்புகள் உள்ள நிலையில் தீ விபத்து ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஊராட்சியின் முன்னாள் துணை தலைவர் முருகன் நேரில் வந்து, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் வந்த தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்ததால், பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
Next Story
