மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு அன்னதானம்

மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு   அன்னதானம்
X
குமாரபாளையத்தில் மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
குமாரபாளையம் வட்டமலை பகுதியில் மாற்றுத்திறன் மாணாக்கர்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 60க்கும்மேற்பட்ட மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். குறிஞ்சியர் முன்னேற்ற பேரவை சார்பில் பல்வேறு சேவைப்பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, இந்த மாணாக்கர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் தர்மலிங்கம், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் குமார், துணை தலைவர் மெய்வேல், ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் சந்திரசேகரன், மாநில தலைமை சந்திரசேகரன், மாநில போது செயலர் சந்திரன், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மாதையன், துணை தலைவர் சக்தி, தலைமை ஆசிரியை (பொ) செல்வராணி, துணை தலைமை ஆசிரியை கற்பகவல்லி உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story