தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கிய பொதுநல அமைப்பினர்

தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கிய பொதுநல அமைப்பினர்
X
குமாரபாளையத்தில் கல்வியாளர் நடராஜாவின் 100வது பிறந்த நாளையொட்டி சைக்கிள் பேரணி, தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல் ஆகியன நடந்தன.
குமாரபாளையத்தில் கல்வியாளர் நடராஜாவின் 100வது பிறந்த நாளையொட்டி சைக்கிள் பேரணி சங்கமேஸ்வரர் ஆலயத்திலிருந்து துவங்கி, சேலம் சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலை வழியாக வந்து, ஜே.கே.கே. ரங்கம்மாள் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. நடராஜா கல்லூரி தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா வரவேற்றனர். 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. காட்டூர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் புகைப்பட கண்காட்சி நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், பங்கேற்று கல்வியாளர் நடராஜாவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கிராமிய கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஞானசம்பந்தம் தலைமையில் பட்டிமன்றம் இன்று மாலை கத்தேரி பிரிவு பகுதியில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடக்கவுள்ளது. இதில் ராஜம்மாள் சுந்தரம், மாணிக்கம், சுயம்பிரபா, எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி தாளாளர் மதிவாணன், உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story