கரூர் -தமிழ் மாமன்னர் பேரரசன் ராஜேந்திர சோழன் ஆயிரம் ஆண்டுகால நிறைவு விழாவை அரசு விழாவாக கொண்டாட ஆட்சியரிடம் மனு.
Karur King 24x7 |19 Nov 2025 2:01 PM ISTகரூர் -தமிழ் மாமன்னர் பேரரசன் ராஜேந்திர சோழன் ஆயிரம் ஆண்டுகால நிறைவு விழாவை அரசு விழாவாக கொண்டாட ஆட்சியரிடம் மனு.
கரூர் -தமிழ் மாமன்னர் பேரரசன் ராஜேந்திர சோழன் ஆயிரம் ஆண்டுகால நிறைவு விழாவை அரசு விழாவாக கொண்டாட ஆட்சியரிடம் மனு. பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் அதன் மாவட்ட தலைவர் வீரமலை தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் தமிழ் மாமன்னர் பேரரசன் ராஜேந்திர சோழன் உலக அளவில் வெற்றி கண்டு தமிழருக்கும் தமிழினத்திற்கும் உலக அளவில் பெருமையைத் தேடிக் கொடுத்து,ஆசிய கிழக்கு நாடுகள் அனைத்தையும் தன் அரசாட்சியின் கீழ் கொண்டு வந்து அனைத்து துறைகளையும் செம்மையான முறையில் அரசாட்சி புரிந்ததால் அன்றைய மக்களாலும் கங்கைகொண்டான் கடாரம் கொண்டான் என்று போற்றி வணங்கப்பட்ட தமிழ் மாமன்னன் பேரரசன் ஸ்ரீ ராஜேந்திர சோழன் கண்ட வெற்றி விழாவின் ஆயிரம் ஆண்டான 2025 ஆம் ஆண்டை அனைத்து உலக தமிழினத்திற்கு தமிழக அரசு கையில் எடுத்து தமிழகம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட தமிழ் இலக்கிய மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில்அமைப்பின் மாநில செயலாளர் சந்திரசேகர் மாவட்ட ஊடக அமைப்பாளர் மனோகரன் முன்னாள் பிஜேபி கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் நகுலன் உள்ளிட்ட நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story





