கொல்லிமலை தேவானூர் நாடு கிராமத்தில் உள்ள அனுபவ நிலத்திற்கு வன உரிமை சட்டப்படி பட்டா வழங்க கோரி மார்க்யூஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.
NAMAKKAL KING 24X7 B |24 Nov 2025 7:46 PM ISTநாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டம் தேவனூர் நாடு களவந்திப்பட்டி கிராமத்தில் வரகு சாமை திணை உள்ளிட்ட சிறு தானியங்களை பல தலைமுறைகளாக பயிரிட்டு வந்த நிலையில்
வன உரிமை சட்டப்படி அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க கோரி மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி கொல்லிமலை தாலுகா குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்லிமலை பொறுப்பாளர் கண்ணன் தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் முற்றுகை ஆர்ப்பாட்டம் செய்தனர் வன உரிமை சட்டத்தை தமிழக அரசே உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் வனத்துறை அராஜ போக்கை கண்டித்தும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தும் கண்டன கோஷங்கள் முழங்கியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்
Next Story


