பரமத்திவேலூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.

X
Paramathi Velur King 24x7 |28 Nov 2025 6:12 PM ISTபரமத்திவேலூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பரமத்தி வேலூர், நவ.28: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரமத்தி வேலூர் தொகுதி தி.மு.க. அலுவலகத்தில் இருந்து பேரணி புறப்பட்டது. அங்கிருந்து 4 ரோடு, திருவள்ளுவர் சாலை வழியாக பள்ளி சாலை செல்லும் பிரிவில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது அங்குள்ள கட்சி பொறுப்பாளர்கள், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பேரணி பேருந்து நிலையம் வழியாக பேட்டை கலைஞர் படிப்பகம் சென்று அங்கு உள்ள தி.மு.க. கொடி கம்பத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு உள்ள கலைஞரின் திருஉருவ சிலை மற்றும் அண்ணாவின் திருஉருவசி லைக்கு மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்குள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து குச்சிப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்கு தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் பாலகிருஷ்ணன் சார்பில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பீரோ வழங்கப்பட்டது. தொடர்ந்து பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும், பிரசவத்திற்கு வந்திருந்த குழந்தை பெற்ற பெண்களுக்கும் பால்,பன் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் பேரூர் செயலாளர் முருகன், நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ்பிரபாகரன் வேலூர்பரமத்தி பேரூர் துணைச் செயலாளர் செந்தில்நாதன் நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு துணை அமைப்பாளர்கள் வக்கீல் பாலகிருஷ்ணன், வக்கீல் செந்தில்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் பொறுப்பாளர்கள், வார்டு பொறுப்பாளர்கள், பரமத்தி வேலூர் பேரூராட்சி கவுன்சிலர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
