ஓட்டப்பிடாரம் அருகே பெண்களை தாக்கி, கொலை மிரட்டல் : திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

ஓட்டப்பிடாரம் அருகே பெண்களை தாக்கி, கொலை மிரட்டல் : திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு
X
ஓட்டப்பிடாரம் அருகே பெண்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சோட்டையன்தோப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையாவை முற்றுகையிட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, பொதுமக்கள் மீது திமுக தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி பொறுப்பாளர் பொன்பாண்டி (எ) பார் ரவி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் சிகிச்சைக்காக துத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் அளித்த புகாரின் பேரில், பெண்களை அவதூறாக பேசி, ஜாதி பெயரை கூறி, தாக்கி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொன்பாண்டி (எ) பார் ரவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story