ராசிபுரத்தில் அரசியல் அதிகாரத்தில் பழங்குடிகள்? எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம். கூட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு..

X
Rasipuram King 24x7 |9 Dec 2025 9:18 PM ISTராசிபுரத்தில் அரசியல் அதிகாரத்தில் பழங்குடிகள்? எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம். கூட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் வனவேங்கைகள் கட்சி சார்பில் அரசியல் அதிகாரத்தில் பழங்குடிகள்? எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டமானது நடைபெற்றது. கூட்டத்தில் வனவேங்கைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் இரணியன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன், உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு குறிஞ்சி நில குறவன் சமுதாயத்தை, பழங்குடி பட்டியில் சேர்த்திட ஆதரவாக பேசி சிறப்புரை ஆற்றினர். அதனை தொடர்ந்து ஆதிதிராவிட நலத் துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், நான் அமைச்சராக இங்கு நிற்பதற்கு பழங்குடிய மக்கள் தான் காரணம் அந்த மக்கள் என்னை கைவிட்டார்கள், கடைசியில் பழங்குடியின மக்கள் வாக்கு அளித்து,கடைசியில் பழங்குடியின மக்கள் அமைச்சராகவே உள்ளேன். கடைசியாக சுற்றி சுற்றி பழங்குடியின மக்களுக்காகவே அமைச்சராக உள்ளேன். அரசியல் என்பதை கடினமான விஷயம் அதிலும் பழங்குடியின மக்கள் போராடி அரசியலுக்கு வருவது மிகக் கடினம். நம்மளும் தொப்புள் கொடி உறவுகள் தான் ,அதன் வேதனைகள் எனக்கு தெரியும். தற்போது 8 லட்சம் பழங்குடியினர் உள்ளனர் கூடிய விரைவில் கணக்கீடு செய்து எத்தனை பழங்குடியின மக்கள் உள்ளார்கள் என்பதை அறிந்து நீங்கள் வைத்துள்ள கோரிக்கைகளை ஏற்று என்னால் முடிந்த வரை செய்து தருகிறேன் எனக் கூறினார்... வனவேங்கைகள் கட்சியின் நிறுவன தலைவர் இரணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 2006 முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் சட்டமன்றத்தில் குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியில் சேர்க்க முன்னெடுத்தார்கள், ஆனால் தீர்மானத்தின் செயல்பாடுகள் முன் வரவில்லை. குறவர் இனத்தில் 27 பெயர்களில் உள்ள குறவர் பெயர்களை நீக்கி குறவன் என்று ஒரே பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். தமிழகத்தில் பழங்குடிய மக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் பங்கீடு என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில் பழங்குடிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட 2 சட்டமன்ற தொகுதியினை 5 ஆகவும், நாடாளுமன்ற தொகுதியினை 3 ஆகவும் உயர்த்திட வேண்டும். மலைப்பகுதியில் இருந்து பல்வேறு காரணங்களாக நகர் பகுதியில் இடம்பெயர்ந்த குறவன், மலைக்குறவன் உள்ளிட்ட பழங்குடி மக்களுக்கு தடையின்றி சான்றிதழ் வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். தமிழகத்தில் மலைகள் மற்றும் கிராம நகர் பகுதியில் வாழ்கின்ற பழங்குடி மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி,கழிப்பிட வசதி,மின்சார வசதி, சாலை வசதி,பேருந்து வசதி, சமூக பாதுகாப்புகளை உறுதிப்படுத்த தமிழக அரசு ஆய்வு குழு ஏற்படுத்த வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பிஜேபி கொடுத்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம், எங்களது கோரிக்கைகளை திராவிட மாடல் ஆட்சி ஏற்றுக் கொண்டால் எங்களது ஆதரவு திமுகவிற்கு இருக்கும் என வன வேங்கைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் இரணியன் தெரிவித்தார். பின்னர் தமிழ் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் நாகை திருவள்ளுவன் கூறுகையில், மத்திய அரசு சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து குறவர் இன மக்களை பழங்குடியின மக்களாக வகைப்படுத்த தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பின்தங்கி உள்ள குறவர் மக்களை மேம்படுத்த வேண்டும். பழங்குடியின மக்கள் அடர்த்தியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளை தேர்ந்தெடுத்து முதல்வரை இடத்தில் தெரிவிப்பதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவகுமார், மாவட்ட தலைவர் செல்லமுத்து, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...
Next Story
