அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி

X
Komarapalayam King 24x7 |9 Dec 2025 9:44 PM ISTகுமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்புக் குழு மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மனநலம் மற்றும் மது போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.கல்லூரி முதல்வர் சரவணா தேவி தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் நாமக்கல் மாவட்ட வள பயிற்றுநர் டேவிட் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு மனநலம், மனநோய், மனநல கோளாறுகள், தீவிர மனநல கோளாறுகள், தற்கொலை தடுப்பு, போதைப்பொருள் பயன்பாடு, அறிவுசார் இயலாமை, குழந்தை பருவ கோளாறுகள், மறதி நோய், மனநல சுவாச பாதிப்பு மற்றும் ஆலோசனை திறன்கள் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சத்யா, சுகுணா, வட்டார இயக்க மேலாளர் அமுதா, வட்டார வள பயிற்றுநர் கற்பகம், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் குமார், பேராசிரியர்கள், மாணாக்கர்கள் பங்கேற்றனர்.
Next Story
