நாமக்கல் ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டல பூஜை விழா லட்சார்ச்சனை நிறைவு! ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!
Namakkal King 24x7 |12 Dec 2025 10:15 PM ISTடிசம்பர் 13 சனிக்கிழமை காலை 7 மணியளவில் 108 வலம்புரி சங்காபிஷேகம், சனிக்கிழமை மாலை, 5 00 மணிக்கு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப ரதத்தில், சுவாமி எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நாமக்கல் ஐயப்பன் சுவாமி கோவிலின், 60ம் ஆண்டு விழா, டிசம்பர் 5ல் துவங்கி டிசம்பர் 14 வரை நடக்கிறது.நாமக்கல்-மோகனூர் சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 60ம் ஆண்டு விழா, கடந்த டிசம்பர் 5 வெள்ளிக்கிழமை துவங்கியது அன்று ஏராளமான பக்தர்கள், ஐயப்பன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்துக்கொண்டு, ஊர்வலமாக சென்று, நாமக்கல் பலபட்டரை மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர், டிசம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை அன்று ஐயப்பன் கோயிலில் இருந்து கூலிப்பட்டி பழனியாண்டவர் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று முருகனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. டிசம்பர் 10 புதன்கிழமை காலை, 9 மணிக்கு ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜை, லட்சார்ச்சனை துவங்கி டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை மாலை துர்க்கை அம்மனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனையுடன் நிறைவு பெற்றது.டிசம்பர் 13 சனிக்கிழமை காலை, 7.45 முதல், மதியம், 1.00 மணி வரை, 108 வலம்புரி சங்காபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.சனிக்கிழமை மாலை, 5 00 மணிக்கு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப ரதத்தில், சுவாமி எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். வருகிற ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் -14) நாமக்கல்- மோகனூர் சாலையில் கந்தசாமி கண்டர் பள்ளி வளாகத்தில் மகா அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
Next Story


