நாகையில் தூய்மைப்படுத்தும் பணியாளர்களுடன் தொடங்கிய கிருஸ்துமஸ் மர விழா; கேக்குகள் மற்றும் பக்கெட் பிரியாணி வழங்கி கொண்டாட்டம்!!

நாகையில் தூய்மைப்படுத்தும் பணியாளர்களுடன் தொடங்கிய கிருஸ்துமஸ் மர விழா; கேக்குகள் மற்றும் பக்கெட் பிரியாணி  வழங்கி கொண்டாட்டம்!!
X
நாகையில் தூய்மைப்படுத்தும் பணியாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு,கேக்குகள் மற்றும் பக்கெட் பிரியாணி வழங்கி கிருஸ்துமஸ் மர விழா கொண்டாட்டப்பட்டது.

தூய்மைப்படுத்தும் பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் தூதர்களாக கௌரவிக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்து பிறப்பின் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்திலும் கிறிஸ்து பிறப்பின் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்காங்கே கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது நாகையில் உள்ள 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த சி.எஸ்.ஐ தூய பேதுரு ஆலயத்தில் சற்று வித்தியாசமான முறையில் கிறிஸ்மஸ் மர விழா கொண்டாடப்பட்டது. இதில் இரவு பகல் என நகராட்சி பகுதிகளை தூய்மை செய்துவரும் தூய்மை பணியாளர்களை வரவழைத்து அவர்களை தூய்மைப்படுத்தும் தூதர்கள் என கௌரவித்து கிறிஸ்மஸ் கொண்டாடி மகிழ்ந்தனர். இதையொட்டி அவர்களின் குடும்பத்திற்கு 5 கிலோ பக்கெட் பிரியாணி மற்றும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. தூய்மைப்படுத்தும் தூதர்கள் வீடுகளில் வழங்கப்பட்ட பிரியாணிகளால் மகிழ்ச்சி பொங்கியது. கிறிஸ்மஸ் மர விழாவினை ஒட்டி தூய்மைப்படுத்தும் தூதர்கள் என்ற பெயரில் நகராட்சியின் தூய்மை பணியாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு உதவிகள் செய்து கொண்டாடிய கிறிஸ்மஸ் மர விழா சற்று வித்தியாசமாக இருந்தது. நகரை தூய்மைப்படுத்தும் தூய்மை பணியாளர்கள் கொண்டாடும் வகையில் சிறப்பிக்கப்பட்ட இந்த கிறிஸ்மஸ் மரவிழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு கேக்குகள் மற்றும் பக்கெட் பிரியாணி என வழங்கி கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை மகிழ்ச்சியோடு பரிமாறிக் கொண்டனர். உலகெங்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் கலை கட்டிய நிலையில் நாகையில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான கிறிஸ்துமஸ் மர விழா அனைவரையும் கவர்ந்தது.நிகழ்ச்சியில் கிறிஸ்து பிறப்பின் அடையாளத்தை நாடகமாக தத்துரூபமாக நடத்தி காட்டினார்.இந்த நிகழ்வில் நாகை சி.எஸ்.ஐ தூய பேதுரு ஆலயத்தின் போதகர் சாம் நியூ பிகின்,ஆலயத்தின் செயலாளர் பவுல்ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Next Story