அறந்தாங்கி அருகே என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி பிரச்சாரக் கூட்டம்!!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வடக்கு ஒன்றிய திமுக சார்பாக கட்டுமாவடியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மணமேல்குடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்தி ராமசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் சாதிக் பாட்சா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கட்டுமாவடி வாக்குச்சாவடியில் 2026 சட்டசபைத் தேர்தலில் திமுகவிற்கு அதிக வாக்குகளை பெற்றுத்தர வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் உழைக்க வேண்டும் என ஒன்றியச் செயலாளர் சக்தி இராமசாமி கேட்டுக்கொண்டார். மேலும் இந்த கூட்டத்தில் திமுக தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேலன், மாவட்ட பிரதிநிதி குமரேசன், ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரபுராமன், துணை அமைப்பாளர் ராஜாராமன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் நாகராஜன், முகமது நலிம், சிராஜுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
