நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட மையத்தின் சார்பில் அனைத்து இந்திய ஓய்வூதியர் தின கருத்தரங்கம்!!

நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட மையத்தின் சார்பில் அனைத்து இந்திய ஓய்வூதியர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. நாகப்பட்டினம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், மாவட்ட தலைவர் சு.வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற இதில், மாவட்டக்கிளை செயலாளர் வி.மாரிமுத்து வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் எம்.பி.குணசேகரன் விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்க மாநில துணைத்தலைவர் வி.பாலசுப்பிரமணியன், மாவட்ட கௌரவ தலைவர் எ.நடராஜன், இந்திய தொழிற் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜேந்திரன், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் எஸ்.கணபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நாகப்பட்டினம் வட்ட தலைவர் கா.ராஜு, வேதாரண்யம் வட்டச் செயலாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, கீழ்வேளூர் வட்ட தலைவர் என்.பக்கிரி சாமி, திருக்குவளை வட்ட தலைவர் டி.நாராயணசாமி, மாவட்ட துணை தலைவர்கள் எம்.காதர் மொய்தீன், ஆர்.நடராஜன், எம்.ராஜமாணிக்கம், எஸ்.சையது பாருக், எஸ்.ஆர்.கலைச்செல்வன், என்.உலகநாதன், இணைச் செயலாளர்கள் அ.தி.அன்பழகன், கே.குப்புசாமி, எஸ்.கோவிந்தசாமி, எஸ்.ஜமால், சி.குணசீலன், எஸ்.வேதாரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கருவூல அலுவலர் த.அருணாச்சலம் சிறப்புரையாற்றினார். மாநில துணைத்தலைவர் குரு.சந்திரசேகரன் நிறைவுறையாற்றினார் மாவட்ட பொருளாளர் சி வாசு நன்றி உரையாற்றினார் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் வழங்க வேண்டும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நூற்றுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கரத்தரங்கில் பங்கேற்றனர்.
