திண்டுக்கல்லில் பேட்டரி கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை அடித்த வழக்கில் வாலிபர் கைது

X
Dindigul King 24x7 |20 Dec 2025 8:12 AM ISTதிண்டுக்கல்
திண்டுக்கல், நந்தவனப்பட்டி திருமால் நகர் பகுதியில் ஜான்கிறிஸ்டோபர்(56) என்பவர் வீட்டில் கடந்த நவம்பர் மாதம் 11-ம் தேதி மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 19 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் டிஎஸ்பி.சங்கர் மேற்பார்வையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் முனியாண்டி, சூரியகலா மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக சிவகங்கை மாவட்டம் மாரநாடு பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் அதிபதிராஜா(25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து தங்க நகை உள்ளிட்டவைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
Next Story
