திண்டுக்கல்லில் பனிப்பொழிவால் விளக்குகளை எரியவிட்டு சென்ற வாகனங்கள்

X
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் அதிக பனிப்பொழிவின் காரணமாக புறநகர் நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். சில தினங்களாக மாவட்டம் முழுவதும் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதன்படி இன்று பனிப்பொழிவால் ரோடுகள் புகைமூட்டம் போல் காட்சியளித்தன. முன்னால் சென்ற வாகனங்கள் தெரியாததால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.
Next Story