குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர்!!

குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர்!!
X
புதுக்கோட்டையில் குலதெய்வ கோவிலில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் சாமி வழிபாடு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள கதிராமங்கலம் ஊராட்சி பொன்சிறுவரை கிராமத்தில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா, ஸ்ரீ பெரியகருப்பர் , அருள்மிகு ஸ்ரீபாளையடிகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயம் முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் திருச்சிராப்பள்ளி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.சு.திருநாவுக்கரசர் குடும்பத்தின் குலதெய்வ கோவிலாகும். இக்கோவிலில் மார்கழி மாத அம்மாவாசை தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தனது தம்பி செல்வரத்தினம் மற்றும் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் ஒன்றிய காங்கிரஸ் தலைவர் கூடலூர் முத்து, மாவட்ட காங்கிரஸ் செயலாளர் தேவதாஸ் காந்தி உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

Next Story