நாகையில் பாய்மர படகு போட்டிக்கான பயிற்சியினை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பு!!

சென்னை ராயல் மெட்ராஸ் யாச்ட் கிளப் மற்றும் தமிழக அரசு இணைந்து நாகையில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாய்மர படகு போட்டிக்கான பயிற்சி துவக்க நிகழ்வு இன்று நாகை துறை முகத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகை புதிய கடற்கரையில் இதற்கான தேர்வு முடிந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான இலவச பயிற்சி இன்று துவங்கப்பட்டது பாய்மர படகு போட்டியில் தேசிய அளவில் ஒலிம்பிக் அளவில் மாணவர்களை கொண்டு செல்வதற்கான ஒரு முன்முயற்சியாக இந்த பயிற்ச்சி வகுப்பு சென்னைக்கு தமிழகத்தில நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பயிற்சியாளர் பாண்டியன் கூறும் பொழுது நீர் விளையாட்டுகளில் பாய்மர படகு என்பது பெற்றோர்களுக்கு ஒரு வகையில் அச்சத்தை ஏற்படுத்தும் குழந்தைகளின் கல்வி மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருந்த நிலையில் இது குறித்து தெளிவாக விளக்கி கூறி ஆரம்ப கட்டத்தில் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி மற்றும் லைப் ஜாக்கெட் போன்றவற்றின் பாதுகாப்பு அம்சங்களை விளக்கி கூறி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக இந்தியாவில் இருந்து தமிழகத்தில் பயிற்சி பெறும் மாணவர்களை தேசிய அளவில் ஒலிம்பிக் போட்டியிலும் கொண்டு செல்வதற்காக இந்த பயிற்சி நடைபெறுகிறது என்றும் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தார். இதுகுறித்து பயிற்சி பெறும் சிறுவர்கள் கூறும்போது ஆரம்பத்தில் பாய்மர படகு போட்டியை பார்த்தபோது பயம் ஏற்பட்டதாகவும் தேர்வில் வெற்றி பெற்று தற்சமயம் பயிற்சியில் சேர்ந்துள்ளதாக குறிப்பிடும் மாணவர்கள் தாங்கள் இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டி வரை செல்லும் கனவு இருப்பதாக தெரிவித்தனர்.
