துணை முதல்வர் பிறந்த நாளையொட்டி குதிரை மாட்டு வண்டி பந்தயம்

X
Pudukkottai King 24x7 |21 Dec 2025 10:27 AM ISTதுணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளரின் 48 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட குன்றாண்டார் மத்திய ஒன்றிய திமுக கழகத்தின் சார்பில் மாபெரும் மாட்டு வண்டி குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
திமுக கழக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட குன்றாண்டார் கோவில் மத்திய ஒன்றிய திமுக கழகத்தின் சார்பில் மாபெரும் மாட்டு வண்டி குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது போட்டியை துவக்கி வைப்பதற்காக கனிமவளத் துறை அமைச்சர் எஸ் ரகுபதி மாவட்ட செயலாளர் கே கே செல்லபாண்டியன் குளவாய்ப்பட்டி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது போட்டியில் பெரிய மாடு சிறிய மாடு குதிரைப் பந்தயம் முதலில் பெரிய மாடு போட்டியினை கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார் 8 மயில் தூரம் கணக்கிடப்பட்டு மாட்டு வண்டிகள் சீறி பாய்ந்து சென்றன இதனை இருபுறமும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர் போட்டியில் வெற்றி பெற்று வரும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் சாரதி முதல் பரிசு 40,000 ரூபாய் 2 ஆம் பரிசு 30 ஆயிரம் மூன்றாம் பரிசு 20 ஆயிரம் நான்காம் பரிசு பத்தாயிரம் என பரிசுத்தொகை சான்றிதழ்களும் கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி வடக்கு மாவட்ட செயலாளர் கே கே செல்லபாண்டியன் மற்றும் குளவாய்ப்பட்டி மத்திய ஒன்றிய கழக செயலாளர் சி சண்முகம் தலைமையில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும் சாரதிக்கும் பரிசு தொகை சான்றிதழ் வழங்கப்பட்டன ஒன்றிய பெருந்தலைவர் கே ஆர் எம் போஸ் மாவட்ட கவுண்சிலர்கள் செல்வம் கை.பழனிச்சாமி திமுக நிரவாகி தாயின்பட்டி கண்னன் ராஜதுரை எழில்ராஜா சபா குறிஞ்வானன் நகர செயலாளர் அண்ணாதுரை மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
Next Story
