திண்டுக்கல் வருகை புரிந்த வணிகர் சங்கத்தின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு

Dindigul
தமிழ்நாடு வாணிகர் சங்கங்களின் சார்பில் திண்டுக்கல் மாவட்டங்களில் 4 இடங்களில் புதிய சங்கங்கள் தொடங்கப்பட்டு சங்க கொடி ஏற்றப்பட்டது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திண்டுக்கல் தெற்கு மாவட்டம் சார்பாக பஞ்சம்பட்டி வக்கம்பட்டி காமலாபுரம் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதிய சங்கங்கள் தொடக்கம் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பங்கேற்பதற்காக வருகை தந்த தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் A.M. விக்ரம ராஜா அவர்களை சீலப்பாடி அருகே மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர் இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் தெற்கு மாவட்ட தலைவர்N.G. நடராஜன் அவர்கள் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் மங்கலம்C. அழகு பொருளாளர் சந்தனம் மண்டல செயலாளர் கிருபாகரன் மாநில இணை செயலாளர் சஞ்சய்குமார் ரவி சுப்பிரமணி பழனி மாவட்ட தலைவர் சரவணன் மாநிலத் துணைத் தலைவர் வாஞ்சிநாதன் வரவேற்றனர் முதலாவதாக திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள வக்கம்பட்டி புதிய சங்கம் தொடங்கப்பட்டு நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர் மாநிலத் தலைவர் A.M. விக்ரம் ராஜா அவர்கள் வணிகர் சங்க பேரமைப்பின் கொடியினை ஏற்றி வைத்து பேசினார் மேலும் சங்கத்தின் செயல்பாடுகளும் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story