திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து
Dindigul King 24x7 |21 Dec 2025 1:00 PM ISTDindigul
திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு போடியிலிருந்து அறந்தாங்கி செல்வதற்காக வந்த அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அரசு பேருந்தின் இஞ்சின் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அரசு பேருந்தில் டிரைவர்,நடத்துனர் பேருந்து நிலையத்தில் இருந்த மற்ற டிரைவர்கள் உதவியுடன் போராடி தீயை அணைக்க முயற்சி செய்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story



