ராமநாதபுரம் சமூக வலைதளங்களில் பரவும் போராட்ட வீடியோவால் பரபரப்பு
Ramanathapuram King 24x7 |21 Dec 2025 1:50 PM ISTதொண்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்களை மேற்பார்வையாளர் தரக்குறைவாக பேசுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சி பகுதியில் தூய்மை பணியாளர்களை மேற்கு பார்வையாளர் குமரேசன் போடி வாடிய தரக்குறைவாக திட்டுவதாகவும் அதை சேர்மனிடம் கூறி நடவடிக்கை எடுக்க புகார் தெரிவித்ததால் எங்களுக்கு வேலை இல்லை என எங்களை புறக்கணித்து வருகிறார் என்றும் கூறுகின்றனர். மேலும் எங்களது குடியிருப்பு பகுதியில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக மேற்பார்வையாளர் குமரேசனிடம் கூறியதற்கு எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அதில் தட்டிக்கட்ட தூய்மை பணியாளர் நாடிமுத்துவை பணிக்கு வரவிடாமல் செய்ததால் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்காக பெண்களை போடி வாடி என திட்டுகிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் தொண்டி பழைய காவல் நிலையம் அருகே சாலையில் வந்த குப்பை வண்டியை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது குறைகளை கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேற்பார்வையாளர் குமரேசன் மீது நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரம் காக்க வேண்டும்தினமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சம்பவம் குறித்து பேரூராட்சி அலுவலகம் கேட்டபோது சம்பந்தப்பட்ட தூய்மை பணியாளர்கள் கேண்டின் ஹேண்ட் என்ற மகளிர் குழு மூலம் பணியமர்த்தப்பட்ட ஊழியர் குமரேசன் என்பதால் அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
Next Story


