வாலாஜாபேட்டையில் எஸ் பி ஐ வங்கியின் சார்பில் விவசாய பெருவிழா

வாலாஜாபேட்டையில் எஸ் பி ஐ வங்கியின் சார்பில் விவசாய பெருவிழா
X
ராணிப்பேட்டை டிச- 22 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை சார்பில், வாலாஜாபேட்டை அம்மூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாய பெருவிழா விழிப்புணர்வு வாரவிழா நடைபெற்றது
ராணிப்பேட்டை டிச- 22 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை சார்பில், வாலாஜாபேட்டை அம்மூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாய பெருவிழா விழிப்புணர்வு வாரவிழா நடைபெற்றது இது தேசிய விவசாயிகள் தினமாக ஒவ்வொரு விவசாயியும் நாட்டின் பெருமை என்ற திட்டத்தின் மூலம் உயர்ந்த விவசாயி வளர்ந்த இந்தியாவாக மாற்றிடும் வகையில் விவசாயிகளை கொண்டாடும் நிகழ்ச்சியாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக எஸ் பி ஐ வங்கியின் துணை பொது மேலாளர் பெனுதர் பாரி, மண்டல மேலாளர் வேலூர் பலராமன் தாஸ், வாலாஜா கிளை முதன்மை மேலாளர் பாவனாசம் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர்கள். இதில் பேசிய துணை பொது மேலாளர் பெனுதர் பாரி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் அன்னதாதா உற்சவம் என்பதை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறோம் இது விவசாயிகளை அங்கீகரித்து, ஆதரித்து, வலுவூட்டும் ஒரு தேசிய முயற்சியாகும் விக்சித் பாரத் 2047 என்ற இந்தியாவின் கனவை நோக்கி நகரும் இந்த கால கட்டத்தில் விவசாயிகள் பங்கு மிக முக்கியமானது. காலநிலை மாற்றங்கள், விலை ஏற்ற, இறக்கங்கள், நவீன உட்கட்டமைப்பு போன்ற சவால்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். எனவே வளர்ந்த இந்தியாவில் விவசாயி பயிர் செய்பவராக மட்டுமல்ல தொழில் முனைவோராகவும் மதிப்பு உருவாக்குபவராகவும் வலுப்படுத்த வேண்டும் என்பதே எஸ்பிஐ வங்கியின் நோக்கமாகும் ஆகவே தான் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு கனவிலும் விவசாயிகளுடன் உறுதுணையாக நிற்கிறது எஸ்பிஐ வங்கி என தெரிவித்தார். மேலும் விவசாயிகள் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை வேளாண்மை பாரம்பரிய விவசாய முறைகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான விவசாய நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, மண் வளத்தைப் பாதுகாப்பது, தரமான விளைச்சலை அதிகரிப்பது போன்றவற்றிற்கு எங்களது வங்கி உறுதுணையாக இருக்கும் மற்றும் இளம் தலைமுறையினரிடையே விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும் என கூறினார் அதனை தொடர்ந்து 4 மகளிர் சுழ உதவி குழுக்களுக்கு தலா 20 லட்சத்துக்கான கடனுதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், துணை கிளை மேலாளர் பூபாலன் உட்பட எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் பொதுமக்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Next Story