இலவச கண் சிகிச்சை முகாம்

பெரம்பலூரில் இலவச கண் சிகிச்சை முகாமில் பெரியவர் மீது சிறுவரை பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொள்ளலாம் இந்த முகம் பொதுமக்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.ஞ்
பெரம்பலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்கம், பெரம்பலூர் டவுன் லயன்ஸ்சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் அன்னை பருவதம்மா   மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்  நடைபெற்றது.                 முகாமில் பெரம்பலூர் விக்டரி லயன் சங்க தலைவர் பத்திரம் சிவா தலைமை வகித்தார். டவுன் லயன்ஸ் சங்கத் தலைவர் நவநீதகிருஷ்ணன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் அருண் குமார், விக்டரி லயன்ஸ் சங்க செயலாளர்கள் பாலகிருஷ்ணன், கார்த்திகேயன், பொருளாளர் இளங்கோவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் ஆளுநர் இமயவரம்பன் முன்னாள் தலைவர்கள் சாந்தி செல்வராஜ், சண்முகதேவன், வட்டார தலைவர்கள் குறிஞ்சி சிவா, சரவணன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.                     முகாமில் கலந்து கொண்ட சுமார் 300 -க்கும் மேற்பட்டவர்களில் கண் குறைபாடு உள்ள 26 நபர்கள் உரிய சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு லயன்ஸ் சங்க சார்பில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story