குளித்தலை ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சி

4 நாட்கள் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சி முன்னிட்டு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் அருகே பகவதி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ கருப்பணசுவாமி கோவில் திருவிழா நிகழ்ச்சி 4 நாட்கள் நடைபெறுகிறது. அதை ஒட்டி இன்று முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் விழா கமிட்டியினர் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். வரும் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை கடம்பர் கோவில் காவிரி திருக்கடம்பன் துறையில் இருந்து அம்மன் வீதி உலா வருதல், 27 ஆம் தேதி சனிக்கிழமை அம்மன் குழு வீற்றிருத்தல், மதியம் அன்னதானம், இரவு நாதஸ்வர இன்னிசை கச்சேரி சுவாமி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோவிலில் மஞ்சள் நீராட்டுடன் அம்மன் புறப்பட்டு பெரியபாலம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் சென்று முக்கிய வீதிகளில் உலா வந்து மீண்டும் பகவதி அம்மன் கோவிலில் அம்மன் குடிபுகும். அதனைத் தொடர்ந்து 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 7 மணி அளவில் விடையாற்றி விழா நடைபெற்று திருவிழா முடிவடைகிறது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story